2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தால் வெற்றிலைகளும் அழிந்தன

ரீ.எல்.ஜவ்பர்கான்   / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த வெற்றிலைச் செய்கை, முழுமையாக அழிவடைந்துள்ளது. 

இம்மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் பிரிவின், களுதாவளை, தேத்தாத்தீவு ஆகிய இடங்களில், சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் செய்கை பண்ணப்பட்ட 400 வெற்றிலைத் தோட்டங்கள் அழிவடைந்துள்ளனவென, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

வெள்ளம், கடுமையான காற்று காரணமாக, வெற்றிலைக் கொடிகள் சரிந்து விழுந்து நாசமாகியுள்ளன. இதனால், வெற்றிச் செய்கையாளர்கள், பெரும் நட்டமடைந்துள்ளனர். அது மாத்திரமின்றி, இதனால் பல தொழில்கள் இழந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 

இப்பிரதேசங்களில், பெருமளவிலான மக்கள் வெற்றிலைச் செய்கையையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளம் காரணமாக, 4,375 ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட மேட்டு நிலப் பயிர்ச்செய்கை, முற்றாக நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதாக, மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மாவட்டத்தின் வெல்லாவெளி, செங்கலடி, கிரான், வாகரை, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளின் செய்கை பண்ணப்பட்டிருந்த சோளம், நிலக்கடலை, கவுப்பி, பயறு, கடலை உட்பட மேட்டு நிலப் பயிர்ச்செய்கையே அழிவடைந்துள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X