2025 மே 19, திங்கட்கிழமை

வேட்பாளர் சியாட் பல்டி

Editorial   / 2018 பெப்ரவரி 01 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வா.கிருஸ்ணா

காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் வேட்பாளருமான எம்.எஸ்.எம். சியாட், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொண்டுள்ளார்.

இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு, நேற்று முன்தினம் (30) இரவு, அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது விடுக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றிய அவர், ஊழல் தொடர்பான, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய உரையே, தன்னுடைய மனதை மாற்றியதாகவும் இதன் காரணமாகவே, தான் அவருடன் இணைவதாகவும் கூறியிருந்தார்.

அத்தோடு, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, காத்தான்குடியில் உரையாற்றும் போது பயன்படுத்திய தகாத வார்த்தைகளுக்கு, இதன்போது அவர் கண்டனம் தெரிவித்தார்.

இதேவேளை, சு.கவில் இருந்து பிரிந்து இருக்கும் அனைவரும், மீண்டும் இராஜாங்க அமைச்சருடன் இணைந்துகொள்ளவேண்டும் என்றும் இதன்போது அவர் கோரிக்கை விடுத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X