Editorial / 2018 பெப்ரவரி 10 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் நகர சபைக்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் ஒருவர், வாக்களிப்புத் தினமான இன்று (10) அதிகாலை தாக்கப்பட்டுள்ளாரென, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர், ஓட்டுப்பள்ளி வட்டார வேட்பாளர் எம்.பி.எம். இர்சாத் ஹனி என்பவரே மோட்டார் சைக்கிளுக்கு அணியப்படும் தலைக்கவசத்தால், தலையிலும் வயிற்றுப் பகுதியிலும் தாக்கப்பட்ட நிலையில், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், அவரது வீட்டுக்குப் பக்கதிலுள்ள வீதியிலேயே இடம்பெற்றுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ள தமது கட்சி உறுப்பினரை, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் சென்று பார்வையிட்டார்.
தேர்தல் வன்முறையாகப் பதிவாகியுள்ள இச்சம்பவம் பற்றி, பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .