Editorial / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரு.அனிதா
மட்டக்களப்பு - வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறையால் தாம் மிகவும் அவதியுறுவதாக, வைத்தியசாலைக்கு வருகை தருகின்ற நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட இந்த இந்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக 15 கிராமங்களுக்கு மேற்பட்ட நோயாளர்கள் வருகை தருகின்றனர். ஒரு நாளைக்கு சுமார் 300க்கும் மேற்பட்ட வெளி நோயாளர்கள் வருகை தருகின்றனர்.
எனினும், இந்த வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை நிலவுவதால் வெளி நோயாளர் பிரிவுக்காக ஒரு வைத்தியரே நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவு நோயாளர்களை மட்டுமே பார்வையிட முடியும் என, வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் வழமைக்கு மாறாக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.
ஆகவே, இவ் வைத்தியசாலையின் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய சுகாதார வைத்திய அதிகாரி கவனமெடுக்க வேண்டுமென, பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .