2025 மே 19, திங்கட்கிழமை

‘ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அனைத்து மக்களுக்கும் உரிமையான தேசிய கட்சி’

வி.சுகிர்தகுமார்   / 2018 ஜனவரி 28 , பி.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியை சிங்கள கட்சி என  யாராவது சொல்வார்களானால், அது மிகப்பெரிய பொய்யாகும். ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி என்பது ஒரு இனத்திற்கு மட்டுமான கட்சியல்ல. இலங்கையில் வாழும் பழங்குடி மக்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் உரிமையான தேசிய கட்சியாகும் என, உள்ளூராட்சி மன்ற இராஜங்க அமைச்சர் சட்டத்தரணி சிறியானி விஜயவிக்ரம நேற்று (27)தெரிவித்தார்.

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த கட்சியை உருவாக்கிய எஸ்.டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க நாட்டில் வாழும் மதகுருமார் உள்ளடங்கிய ​ஐந்துவகையான பிரிவினரையும் இணைத்தே கட்சியை வழிநடத்தினார். அவர்கள் எந்த மதத்தினர் என்று பார்க்கவில்லை.

இந்த கட்சி நாட்டு மக்களின் கட்சியாகும். அதன் சொந்தக்காரர்களும் அவர்களே. தற்போதைய  தலைவர் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன கட்சியில் அனைவருக்கும் சமவுரிமை சம அந்தஸ்து கொடுத்து வழிநடத்தி கொண்டிருக்கின்றார். ஆனாலும் கடந்த கால ஆட்சியாளர்கள் கட்சிக்குள் பிரிவினவாதத்தை உண்டுபண்ணுகின்றனர்.

மேலும், நாடாளுமன்றத்தில் ஏனைய விடயங்களை பேசுவதை தவிர்த்து, அம்பாறை மாவட்ட மக்களின் தேவைப்பாடுகள் பற்றி பேசுமாறு, தமிழரசுக்கட்சியினரை நான் அடிக்கடி நாடாளுமன்றத்தில் கேட்டுவந்துள்ளேன்.

அவர்கள் நீண்ட காலமாக துன்பப்படுகின்றார்கள், ஆகவே அவர்களுக்கு சேவை செய்யுங்கள் என வாதிட்டுள்ளேன். நாடாளுமன்றத்தில் அவர்கள் காரசாரமாக வாதிடுகின்றார்கள். ஆனால், மக்களுக்கு அவர்களது சேவை கிடைக்கப்பெற்றுள்ளதா என்பது எங்களுக்கு தெரியவில்லை.

நான் தமிழ் மக்களை நேசிக்கின்றேன். அவர்கள் மீது அதிக அக்கறை கொண்ட நான் அவர்களுக்கு ஏதும் கிடைக்குமானால் அதனை வரவேற்பதுடன், ஆதரவினையும் வழங்குவேன்.

மேலும், உங்களது பிரச்சினைகளை முடிந்தளவு தீர்;த்து வைப்பேன். அதற்கு நீங்கள் எங்களுடன் கைகோர்த்து எம்முடன் இணைந்துள்ள வேட்பாளர்களுக்கு ஆதரவினை வழங்குங்கள் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X