Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Thipaan / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பில் 1990ஆம் ஆண்டு காணாமல் போன யேசு சபைத் துறவி அருட்தந்தை இயூஜின் ஜோன் ஹேபியர் அடிகளாரின் 25ஆவது ஆண்டு நினைவு அஞ்சலிக் கூட்டுத்திருப்பலி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட அரங்கில் நேற்றுக் காலை நடைபெற்றது.
இந் நிகழ்வில், புனித மிக்கேல் கல்லூரி அதிபர் ஆர்.வெஸ்ஸியோ வாஸ் வரவேற்புரையினையும், புனித மிக்கேல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இக்னேசியஸ் சில்வெஸ்ரர் அஞ்சலியுரையினையும் நிகழ்த்தினர்.
கூட்டுத்திருப்பலியினை மட்டக்களப்பு யேசு சபையின் மேலாளரான் அருட்தந்தை போல் சற்குணநாயகம் ஒப்புக் கொடுத்தார்.
வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற கூட்டுத் திருப்பலியுடனான அஞ்சலி நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன், கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம், பாடசாலைகளின் அதிபர்கள், முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்தொகையானோர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சமாதானப் பணிக்காக பாடுபட்ட யேசு சபைத் துறவி அருட்தந்தை இயூஜின் ஜோன் ஹேபியர் அடிகளார் மோட்டார் சைக்கிளில் வாழைச்சேனை சென்று மட்டக்களப்பு திரும்பிக் கொண்டிருக்கையில் ஏறாவூரில் அவருடைய மாணவனான பேர்ட்டன் பிரான்சிசுடன் 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி காணாமல்போயிருந்தார்.
அருட்தந்தை இயூஜின் ஜோன் ஹேவபயர் அடிகளார் அமெரிக்காவின் லூசியான மாநிலத்திலுள்ள லபெயிற் நகரில் பிறந்தார். அங்கிருந்து பல இன்னல்களுக்கு மத்தியிலும் 1948ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி இலங்கையின் வடக்கே வந்திறங்கினார்.
புனித மிக்கேல் கல்லூரியின் ஒரு கணித ஆசிரியராகவும், ஆங்கில டிப்ளோமா பட்டதாரியாகவும் திகழ்ந்தார். அத்துடன் புனித மிக்கேல் கல்லூரியின் கூடைப்பந்தாட்ட பயிற்றுனராக பணியாற்றி பெருந்தொகையான கூடைப்பந்தாட்ட வீரர்களை மட்டக்களப்பில் உருவாக்கினார்.
அத்துடன், மட்டக்களப்பிலுள்ள கிழக்கு தொழில்நுட்பக் கற்கைகள் நிறுவனத்தில் நீண்ட காலமாக அதிபராகவும் விரிவுரையாளராகவும் செயற்பட்டு பெருந்தொகையான தொழில்நுட்பவியலாளர்களையும் உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யேசு சபைத் துறவி அருட்தந்தை இயூஜின் ஜோன் ஹேபியர் அடிகளாரின் ஞாபகார்த்தமாக புனித மிக்கேல் கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் கூடைப்பந்தாட்டப் போட்டி கடந்த நான்கு வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago