Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2018 ஜனவரி 16 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
“கோறளைப்பற்று மத்தி விடயம் சம்பந்தமாக பேசுவதற்கு முடியும் என்று சொன்னால், ரவூப் ஹக்கீம் அல்லது அவரது ஆட்களை என்னோடு மூன்று மணிநேர விவாதத்துக்கு வர முடியுமா?” என, கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
வாழைச்சேனை - கோறளைப்பற்று பிரதேச சபைக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னணியில் யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிறைந்துறைச்சேனையில், நேற்று (15) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர், தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
“கோறளைப்பற்று மத்தி விடயம் சம்பந்தமாக பேசுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். முடியும் என்று சொன்னால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அல்லது அவரது ஆட்களை என்னோடு மூன்று மணிநேர விவாதத்துக்கு வர முடியுமா என்று கேட்கின்றேன்.
“கல்குடாப் பிரதேசத்தில் உள்ள மக்களிடத்தில் உள்ள மிக முக்கிய தேவையான கோறளைப்பற்று மத்திக்கு தனிப் பிரதேச சபை பெற்றுக்கொள்வதும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்துக்கு எல்லைகளை மீட்டிக் கொள்கின்ற விடயமும், கல்வி ரீதியாக எமது சமூகம் முன்னேற வேண்டும் என்கின்ற விடயத்தில் தான் நாம் பயணிக்க வேண்டும்.
“கோறளைப்பற்று மத்திக்கு தனியான பிரதேச சபை பெற்றுத்தர வேண்டும் என்ற இலக்கு, கோறளைப்பற்று மத்தி பிரதேச எல்லைகளை நாங்கள் வரையறை செய்கின்றபோது, அதற்கு பேசுகின்ற பேச்சாளர்களாக, என்னால் தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்களாகிய நீங்கள் இருக்க வேண்டும்.
“ஏனென்றால் ரவூப் ஹக்கீம் என்கின்ற ஏமாற்றுப்பேரொளி என்றும் உங்களுக்கு எடுத்துத்தரபோவதில்லை. இந்த மண்ணை நேசிக்கும் எங்களுக்கு இருக்கின்ற வலிப்பு ரவூப் ஹக்கீம்போன்றவர்களுக்கு தெரியாது. இதனை கல்குடா பிரதேச முஸ்லிம் மக்கள் யோசிக்க தவறுவார்களாக இருந்தால், ஏமாற்றி விட்டுத்தான் போவார்கள்” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago