Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 செப்டெம்பர் 15 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சாய்ந்தமருது ஜும்மா பெரிய பள்ளிவாசலுக்கு முன்னால் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து இன்று (15.09.2023) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் 23 வது நினைவு தின நிகழ்வு சாய்ந்தமருதில் தேசிய நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் பிரதேச செயலாளரும் கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளருமான ஏ.எல்.எம். சலீம், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்
ஆர்ப்பாட்டத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபை முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் ஆகியோர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எதிர்ப்பு பதாகைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பினார்கள்.
பொலிஸார் வீதி போக்குவரத்தை சீர் செய்ததுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனையடுத்து சிறிது நேரத்தின் பின்னர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். R
38 minute ago
43 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
43 minute ago