Princiya Dixci / 2021 ஜனவரி 10 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து மக்களையும் ஆதரவு வழங்குமாறு, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரியுள்ளார்.
நேற்று (09) மாலை, விசேட காணொளியை வெளியிட்டுள்ள அவர், இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அக்காணொளியில் இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் 11ஆம் திகதி (நாளை) வடக்கு மற்றும் கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹர்த்தாலுக்கு வடக்கு, கிழக்கிலுள்ள அனைத்து மக்களினதும் பூரண ஆதரவை எதிர்பார்த்து நிற்கின்றோம்.
“அன்றைய தினம் கடைகளை அடைத்து, தற்போதைய அரசாங்கம் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களுக்கு எதிராக செய்கின்ற அநீதிகளுக்கு நாம் அனைவரும் ஒருமித்த குரலாக எதிர்ப்பை வெளியிட வேண்டும். யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் உடைக்கப்பட்டுள்ளமையானது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.
“அதேப்போல பல்வேறு விடயங்களில் சிறுபான்மை மக்களை இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக தாக்கிக்கொண்டு வருகின்றது. நாங்கள் எங்களுடைய எதிர்ப்கை இந்த இடத்தில் நிச்சயமாக தெரிவிக்க வேண்டும்.
“அந்தவகையில், கடந்த காலத்தில் எங்களுடைய அரசியல் கருத்துகள் வித்தியாசமாக இருந்தாலும், வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் அனைவரும் ஒருமித்த குரலுடன் இந்த விடயத்துக்கு ஆதரவு தர வேண்டும்.
“கடந்த தேர்தலில், கடந்த காலத்தில் எங்களுடைய அரசியல் கருத்துகள், அரசியல் பின்னணிகள் வேறாக இருந்தாலும் கூட, இந்த விடயத்தில் எங்களுடைய அன்பார்ந்த, பணிவான ஒரு வேண்டுகோள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒருமித்த குரலாக இந்த ஹர்த்தாலை நடத்த வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago