Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 நவம்பர் 09 , பி.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
“அரசியல்வாதிகள், இன நல்லுறவை சீர்குலைக்கம் வகையில் நடந்துகொள்ளக் கூடாது” என, இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
இன்று (09) வியாழக்கிழமை, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“அரசியல்வாதிகள் தமது பேச்சுக்கள் மற்றும் செயற்பாடுகளை இன நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
“புதன்கிழமையன்று, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்றத்தில் கூறியிருக்கும் கருத்தானது, இன நல்லுறவுக்கு ஆரோக்கியமான கருத்தாகத் தென்பட வில்லை.
“பொதுவாக இன்று எந்தவொரு அரசியல்வாதியும் இவ்வாறு இரத்த ஆறு ஓடும் என்ற சொற்களைப் பாவிப்பது கிடையாது.
“வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் நல்லுறவு துளிர் விட்டு வரும் இந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வாறான கருத்துகள் அதற்கான பல்வேறு தடைகளை ஏற்படுத்துவதுடன், தப்பான அபிப்பிராயங்களையும் உண்டுபண்ணும்.
“இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அதற்கு அவர் உடன்பாடில்லை என்றாலும் அவர் வேறு வார்த்தைகளைப் பாவித்திருக்கலாம். அவ்வாறில்லாமல் அவர் இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களைப் பாவிப்பதன் மூலம் இனங்களுக்கிடையில் சந்தேகம் கொண்டு பார்க்கும் நிலையே ஏற்படும்.
“இன நல்லுறவையும் சமூக ஐக்கியத்தையும் வளர்க்க வேண்டிய இந்த தருணத்தில் இவ்வாறான பேச்சுகள் ஒரு சமூகத்தைக் காயப்படுத்துவது போன்றுள்ளது. எனவே, இதில் அரசியல்வாதிகள் கவனமெடுக்க வேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago