Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2021 ஜனவரி 04 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன், ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இருவர், நேற்று (03) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து ஹெரோய்ன் போதைப்பொருட்களும் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்திய ஓட்டோக்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸின் ஆலோசனைக்கு அமைவாக, மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியின் தலைமையில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் கீழ், மட்டக்களப்பு நகரில் மட்டக்களப்பு - திருகோணமலை வீதியில் வைத்து ஓட்டோக்கள் இரண்டை சோதனையிட்டபோது அதில் இருந்து ஹெரோய்ன் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது 11 கிராமும் 20 கிராம் கொண்ட ஹெரோய்ன் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் ரூபாய் எனவும் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றத்தடுப்பு விசாரணைப்பிரின் பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பண்டார தெரிவித்தார்.
செங்கலடி ,ஏறாவூர் பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை தொடர்ந்து நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
43 minute ago
48 minute ago