Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூன் 23 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடியில், ஹெரோய்ன் போதைப்பொருளுடன் இருவரையும் ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவருமாக மூவரை, இன்று (23) காலை கைதுசெய்துள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் விசேட பணிப்புரையின் கீழ், காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து ஐஸ், ஹெரோய்ன் போதைப்பொருள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைதான இருவரும் சகோதரர்கள் எனவும் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, குற்றச்செயல்களுடன் தேடப்பட்டு, பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவரையும் காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
42 minute ago
47 minute ago