2025 மே 03, சனிக்கிழமை

ஹெரோய்ன் வியாபாரிகள் மூவர் கைது

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்ட மூவர் சந்தேகத்தின் பேரில், இன்று (20) காலை கைப்பற்றப்பட்டுள்ளனரென, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தவலையடுத்து ரிதிதென்னை, பிறைந்துறைச்சேனை, மாஞ்சோலை பதுறியாநகர் ஆகிய பிரதேசங்களில் மேற்கொண்ட நடவடிக்கையின் போதே, மேற்படி நபர்கள் செய்யப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களுட்ன, மூன்று சந்தேகநபர்களையும் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அந்தவகையில், ரிதிதென்னை பகுதியில் ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்ட நபரிடம் இருந்து 7 மில்லிகிராம் ஹெரோய்னும், பிறைந்துறைச்சேனை பகுதியில் ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்ட நபரிடம் இருந்து 5 மில்லிகிராம் ஹெரோய்னும், மாஞ்சோலை பதுறியாநகர் பகுதியில் ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்ட நபரிடம் இருந்து 5 மில்லிகிராம் ஹெரோய்ன் அடங்கலாக மூவரிடம் இருந்து 17 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப்பொருளை, வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு, பொலிஸில் ஒப்படைத்துள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X