Suganthini Ratnam / 2017 ஜூன் 01 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வ.துசாந்தன்
கல்வியில் புதிய மாற்றத்தை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், கல்வி மறுசீரமைப்புத் தொடர்பில் அரசாங்கம் பல தலைப்புகளில் பல விடயங்களை முன்னிலைப்படுத்திச் செய்ய உள்ளது எனக் கல்வி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர், பேராசிரியர் ஜி.குணபால நாணயக்கார தெரிவித்தார்.
மட்டக்களப்பு மேற்குக் கல்வி வலயத்துக்கு உட்பட்ட அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் தேசிய மாணவர் படையணி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (31) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,'அனைத்து மாணவர்களும் தரம் -13வரை கல்வியைக் கற்பதற்கான கல்வி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
'இந்த மறுசீரமைப்பின்படி, க.பொ.த சாதாரணதரத்தில் சித்தியடைந்த மாணவர்களும் சித்தியடையாத மாணவர்களும் தரம் -13வரை கல்வி கற்க முடியும்.
'இந்த மறுசீரமைப்பில், தொழில் முன்னிலைப் பாடங்களை முன்வைத்து கற்றல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் 26 பாடங்கள் முன்வைக்கப்படவுள்ளன.
'இந்தப் பாடங்களில் மாணவர்கள் தாங்கள் விரும்பிய 3 பாடங்களை 12ஆம் தரத்தில்; தெரிவுசெய்யலாம் என்பதுடன், 13ஆம் தரத்தில் மாணவர்கள் தாங்கள் விரும்பித் தெரிவுசெய்த 3 பாடங்களில் ஒரு பாடத்தை சிறப்புக் கற்கையாக மேற்கொள்ள வேண்டும்.
'இக்கற்றலின் இறுதியில் என்.வி.கியூ-4 தரச் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கப்படும். மாணவர்களின் திறமைக்கு ஏற்ற விடயங்களை இப்பாடங்களின் மூலமாக மாணவர்கள் கற்க முடியும்' என்றார்.
'முதற்கட்டமாக 42 பாடசாலைகளில் எதிர்வரும் செப்டெம்பரில் தொழில் முன்னிலைப் பாடங்களுக்களுக்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
'எதிர்வரும் 2018ஆம் ஆண்டு ஜனவரியில் 100 பாடசாலைகளிலும் 2019ஆம் ஆண்டில் 1,480 பாடசாலைகளில் தொழில் முன்னிலைப் பாடங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன' என்றார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago