Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 ஜூன் 04 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எமது அழகான நாட்டில் வைரஸ் பரவுதல் அபாயகரமான நிலையை அடைந்திருப்பதனால், இந்த நோய் பரவுதலைத் தடுத்தொழிக்க அனைத்து குடிமக்களின் ஒத்துழைப்பும் தேவை.
டெங்கு காய்ச்சல், டெங்கு குருதிப் பெருக்குக்காய்ச்சல் DHF), டெங்கு அதிர்ச்சி நோய் (DSS) ஆகியவற்றுக்கு காரணமாக இருக்கும் டெங்கு வைரஸ் ப்லாவி விரிடே பிரிவைச் சேர்ந்தது. இரத்தமுறுஞ்சும் நுளம்புகளின் ஒரு பிரிவான ஈடிஸ் இஜிபீடை மற்றும் ஈடஸ் அல்போபிக்டஸ் ஆகிய நுளம்புக் கடியினால் பரவிவருகிறது. (Aedes E.gypti,A.Albopictus) இவை அனேகமாக நகர்புறங்களிலுள்ள குடியிருப்புக்களிலும் சுற்றுப்புறங்களிலும் மனிதனினால் உருவாக்கப்பட்ட நீர் தேங்கும் இடங்களில் உருவாகின்றன. இந்த நுளம்பு வளர்ச்சிக்கு தெளிவான தேங்கும் நீர் தேவை. அவ்வாறு உகந்த இடங்களாவன,
இனப்பெருக்க காலம் ஏறக்குறைய 6 – 7 நாட்கள். இந்த ஈடிஸ் நுளம்பு மற்றையவை போல் இரவில்லாமல் பகலில் செயற்படும். இந்த நுளம்பு பெருகுமிடங்களிலிருந்து 4 கி.மீ வரை செயற்படும்.
வைரஸ் நோயுள்ள ஒருவரிடமிருந்து நோய்வாய்ப்பட்ட ஒருவருக்கு ஈடிஸ் நுளம்பு கடியினால் பரவுகிறது. நுளம்பு வைரஸை உட்கொண்ட பின் அதனுடலில் பெருகி வேறோருவருக்கு கடிக்கும் பொழுது அவருக்குத் தொற்றுகிறது.
அந்த வைரஸ் வகைப்படும். ஒரு வகை வைரஸினால் பாதிக்கப்பட்டு சுகமான ஒருவனுக்கு, மற்ற வைரஸ் வகை தொற்றலாம். மழை காலங்களில் பெருகுமிடங்கள் கூடுவதாக டெங்கு வேகமாகப் பரவும்.
சாதாரண டெங்குக் காய்;சலானது காய்ச்சல், அதிகமான உடல்வலி, கடுமையான தலையிடி, கண் புருவ மேல் கடுமையான நோ போன்ற அறிகுறிகள். அதில் ஒரு பகுதி நோயாளர்களுக்கு டெங்கு குருதி அதிர்ச்சி நோய் ஆகிய ஆட்கொல்லி நோய் வரலாம்.
டெங்கு குருதி பெருக்குக் காய்ச்சல், டெங்கு அதிர்ச்சி நோய் ஆகியவற்றுக்கு காரணிகள் தெரியவில்லை. பலவகை டெங்கு வைரஸினால் திரும்பத் திருப்ப நோய் வருமிடத்து வரலாம். இது அநேகமாக நல்ல ஆரோக்கியமான, புஷ்டியான இளம் பராயத்தினரை தாக்கினாலும் அதற்;கு ஒரு வயதெல்லை இல்லை.
மூன்று, நான்கு நாட்கள் சாதாரண டெங்கு காய்ச்சலின் பின் இந்த டெங்கு நோய் உண்டாக்கும். டெங்கு குருதி பெருக்கம் காய்ச்சல் (னுர்ளு) உள்ளவர்களின் மூக்கு, தோல், சிறுகுடல், நுரையீரல் ஆகிய உறுப்புக்களிலிருந்து இரத்தக்கசிவு ஏற்படும்;.
இந்த குருதி கழிவு மோசமாக இருக்கும் கூடும். டெங்கு அதிர்ச்சி நோய் (னுர்ளு) நோயாளருக்கு இரத்த அழுத்தம் சடுதியாகக் குறைந்து அதிர்ச்சியடைந்து ஒன்று அல்லது இரண்டு நாட்களில் இறக்கக்கூடும்.
இந்த நோயின் அறிகுறி கண்டவுடன் தகுந்த வைத்தியரின் ஆலோசனை பெறுதல் வேண்டும். ஆதலால் ஆரம்பத்திலேயே மருத்துவமனையில் சேர்ந்து நாட்களாக உப்பு நீர் செலுத்தி இரத்து அழுத்தத்தைச் சீராக்கி இறப்பு வீத்த்தை குறைப்பதே ஒரே வழியாகும். ஆஸ்பிரின் அடங்கிய மருந்துக்கள் குருதி தழிவை அதிகமடையச் செய்தால் அவற்றை தவிர்க்க வேண்டும்.
தடுப்பு முறைகள்
இந்த நுளம்புகள் சுவரில் அமர்வதில்லையாதலால் மலேரியா நுளம்பினை அழிக்க உதவும் கிருமிநாசினிகளை தெளித்தல் இதைக் கட்டுப்பாடுத்தக்கூடிய முறையல்ல. நுளம்புவலை, சுருள் ஆகியவற்றையும் இந்நுளம்புகள் பகலில் கடிப்பதால் பிரயோசனமற்று போகிறது.
ஆகையால் எல்லா மக்களும் தொடர்ந்து ஒத்துழைப்பை அழித்து நுளம்பு பெருகுமிடங்களை அழிக்க வேண்டும்.
நுளம்பு பெருக்கத்தை தடுக்க சில வழிமுறைகள்
ஒருவரால் செய்யக்கூடிய சில முறைகள்
21 minute ago
31 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
42 minute ago