2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கண்டி விபத்தில் அறுவர் பலி: 20 பேர் படுகாயம்

Kanagaraj   / 2013 நவம்பர் 17 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிஷாந்தன், சி.எம்.ரிஃபாத்


கண்டி –பதுளை வீதியில் ஹாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இதுவரை அறுவர்உயிரிழந்துள்ளனர்.

பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதுண்டதில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மேலும் 20 பேர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வான் மற்றுமொரு வானை முந்தி செல்வதற்கு முயற்சித்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக  தலாதுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்குள்ளான வானில் 26 பேர் பயணித்துள்ளனர். இதில் 3 குழந்தைகளும் 3 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த மேலும் 20 பேர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 பேர் மிக ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .