2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விபத்து: 19 வயது இளைஞர் பலி

Kogilavani   / 2013 நவம்பர் 15 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.ரஞ்ஜன், கிஷாந்தன்


டிம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

ருவன்புர பகுதியில் வசிக்கும் 19 வயதுடைய ஜானக்க பண்டார என்பவரே விபத்தில் உயிரழந்துள்ளார்.

குடாகம, ஆகில் பகுதியில் கல் உடைக்கும் வேலைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மண் நிரப்பிய பார ஊர்தி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின்மீது வீழ்ந்துள்ளது.

இதன்போது, லொறியில் திருத்த பணிகளில் ஈடுபட்டிருந்த மேற்படி இளைஞன் நசியுண்டு இறந்துள்ளார்.

தற்போது இவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் டிம்புள்ள – பத்தனை பொலிஸார் விபத்து தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .