2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் 30 பேர் காயம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 08 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆர்.கோகுலன்


வெலிமடை, ஹப்புத்தளை பிரதான வீதியில் 3ஆம் கட்டைப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹட்டன் பிரதேசத்திலிருந்து ஹப்புத்தளை நோக்கி திருமண வீடொன்றுக்குச் சென்றுகொண்டிருந்த வானொன்றே விபத்திற்குள்ளானது.

இவ்வான் வீதியை விட்டு விலகிச்சென்று அங்கிருந்த தொலைத்தொடர்புக் கம்பமொன்றுடன் மோதிச்சென்று பின்னர் அருகிலுள்ள வேலியுடன் மோதி விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 21 பேர் வெலிமடை வைத்தியசாலையிலும் 9 பேர் பதுளை வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பான விசாரணைகளை வெலிமடைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .