2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தனியார் பஸ் விபத்தில் 30 பேர் படுகாயம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 22 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாவலப்பிட்டியிலிருந்து கண்டிநோக்கி பயணித்த தனியார் பஸ்வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சற்று முன்னர் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நாவலப்பிட்டி பல்லேகம எனுமிடத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியார் பஸ்வண்டிக்கு இடமளிக்க முற்பட்டபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் சிறுவர்கள் இருவரும், பெண்கள் எட்டுபேரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் வேக கட்டுப்பாட்டை இழந்ததினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .