2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கைவிடப்பட்ட 4 பிள்ளைகள் பொலிஸில் ஒப்படைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 07 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

பெற்றோர் கைவிட்டுச் சென்றதாகக் கூறப்படும் 4 ஆண் பிள்ளைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பேராதனைப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் பாட்டியெனக் கூறப்படும் ஒருவரே  இப்பிள்ளைகளை பேராதனைப் பொலிஸில்  ஒப்படைத்துள்ளார்.

கண்டி, உடுநுவர பிரதேசத்தைச் சேர்ந்த பிள்ளைகளே இவ்வாறு பெற்றோரால் கைவிடப்பட்டுள்ளனர். 11, 8, 6, 2 வயதுடைய பிள்ளைகளே கைவிடப்பட்டுள்ளனர்.  இப்பிள்ளைகளின்; தாயார் பட்டதாரியெனவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாய்க்கு 10 நாட்கள் வயதுடைய மற்றுமொரு பெண் குழந்தையொன்று இருந்ததாகவும் அக்குழந்தையை தாயும் தந்தையும் தம்முடன் கொண்டுசென்றுள்ளதாகவும் அப்பாட்டி கூறியதாக பொலிஸார் கூறினர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X