Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மார்ச் 13 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஸ்பராஜா
'மலையக மக்களின் அபிவிருத்தி விடயங்களில், அமரர் சந்திரசேகரன் நன்கு புரிந்துணர்வுடன் செயற்பட்டவர். அதேபோன்றுதான், நாங்களும் மலையக மக்களின் துன்ப துயரங்களை நன்கு அறிந்து செயற்பட்டு வருகின்றோம். இதன்காரணமாகவே, மலையக மக்கள், எமக்கு அரசியல் பலத்தை வழங்கியுள்ளனர்' என்று, மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம் தெரிவித்தார்.
'தற்போது அனுஷா தர்ஷினி சந்திரசேகரன், தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். இவரது அரசியல் வளர்ச்சிக்கு, நாம் அனைவரும் பங்களிப்பு வழங்க வேண்டும்' என்றும் அவர் கூறினார்.
மலையக மக்கள் முன்னணியின் உயர்பீடத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ள, அனுஷா தர்ஷினி சந்திரசேகரனை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, லிந்துலை எல்ஜின் தோட்டத்தில, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர்,
'மலையக மக்கள் முன்னணியின் வளர்ச்சிக்கு, எல்ஜின் தோட்ட மக்கள் அதிக் கூடிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். இத்தோட்டத்தில் வாழும் மக்களின் அபிவிருத்தியில், எமதுக் கட்சி அதிகக் கவனம் செலுத்தும்.
எமது சமூகம, இந்த நாட்டில் வாழ்வதாக இருந்தால் அறிவு சார்ந்த சமூகமாக உயரவேண்டும. அப்போதுதான், ஏனைய சமூகத்துடன் நாமும் நிகராக வாழ முடியும். அதற்கான வேலைத்திட்டங்களை, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்;ணன் முன்னெடுத்து வருகின்றார். மலையக பிரதேசத்தில் அதிகமான பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இன்னும் பல பாடசாலைகளை, அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றார்' என அவர் மேலும் கூறினார்.
53 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago