Kogilavani / 2016 ஏப்ரல் 19 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா.திருஞானம்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளை மையமாகக் கொண்டு இன்று(20) 500 பேருக்கு வழங்கப்படவிருந்த நியமனம் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பெருந்தோட்ட உதவி ஆசிரியர்கள் 3,021 பேரில் 820 பேர் பேருக்கு இதுவரை நியமனம் வழங்கப்படவில்லை. இவர்களில் முதல் கட்டமாக 500 பேருக்கு இன்று 20 ஆம் திகதி நியமனம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சித்திரை புதுவருட காலப்பகுதியில் போக்குவரத்து பிரச்சினைகள் மற்றும் கடிதம் கிடைப்பதில் தாமதம் அதிகமாக காணப்படும் என்ற காரணத்தினால் நியமன திகதியை மாற்றுமாறு பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த மாற்றம் மேற் கொள்ளபட்டதாக அவர் கூறினார்.
தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்கள் தற்போது தபாலிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
24 minute ago
34 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
34 minute ago
49 minute ago