2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

'இ.தொ.கா.வின் அங்கத்தவர்கள் அதிகரித்து வருகின்றனர்'

Kogilavani   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொழிலாளர்  காங்கிரஸின் அங்கத்தவர்கள் பெருந்தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வருவதாக அதன் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.

'எமது அங்கத்தவர்கள் முன்னரைவிட தோட்டப் பகுதிகளில் அதிகரித்து வருகின்றார்கள்.  

இ.தொ.காவின் சேவையும் ஸ்தாபனத்தை வழிநடத்தும் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் வழிகாட்டலும், உத்தியோகஸ்தர்களின் அரப்பணிப்புமே இதற்கு காரணமாகும்' எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்இ'இலங்கை தொழிலாளர் காங்கிரஸானது கடந்துவந்த பாதைகள் மிகவும் கரடுஇ முரடானது. சொல்லொனாத் துயரங்களை அனுபவித்து பல போராட்டங்களுக்கு மத்தியில் 76 ஆண்டுகளை கடந்து நாம் இன்னுமொரு புதிய ஆண்டுக்குள் பிரவேசித்திருக்கிறோம்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும்இ மலர்ச்சிக்கும் உந்துசக்தியாகவும் அடித்தளமாகவும் அமைந்தவர்கள் எமது முழுநேர உத்தியோகஸ்தர்கள்தான் என்பது பெருமைப்படக் கூடியதொன்றாகும்.

தொழிலாளர் வர்க்க சிந்தனையோடும் உணர்வோடும் செயலாற்றியதன் நிமித்தமே பிரச்சனைகளை எதிர்கொள்ளவும் அதனை வெற்றிக்கொள்ளவும் முடிந்திருக்கின்றது. இது எமக்கு கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும்' என அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .