Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 07 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் ஏற்பாட்டினால் நியமனம் வழங்கப்பட்ட உதவி ஆசிரியர்களுக்கு, தீர்மானிக்கப்பட்டிருந்த ஆராயிரம் ரூபாய் என்றடிப்படையிலான மாதாந்த கொடுப்பனவே, தொடர்ந்தும் வழங்கப்படும் என்று ஊவா மாகாண முதலமைச்சர் சாமரசம்பத் தசநாயக்க கூறினார்.
உதவி ஆசிரியர்களது சம்பள விவகாரம் குறித்து ஊவா மாகாண முதலமைச்சரிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
'பதுளை எம்.பி. வடிவேல் சுரேஸ் உறுதியளித்ததன் பிரகாரம், கல்வியமைச்சின் அனுமதியைப் பெற்றுக்கொடுக்காததால், இது வரையும் வழங்கப்பட்ட மேலதிக பத்தாயிரம் ரூபாய் கொடுப்பனவை உடனடியாக நிறுத்தியுள்ளேன்.
உதவி ஆசிரியர்களுக்கு ஆராயிரம் ரூபாய் என்றடிப்படையிலேயே மாதாந்த கொடுப்பனவு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால், அத்தொகையை பத்தாயிரம் ரூபாயினால் அதிகரிக்க கல்வியமைச்சு அனுமதியைப் பெற்றுத்தருவதாக பதுளை எம்.பி. வடிவேல் சுரேஸ் என்னிடம் உறுதியளித்ததுடன், அனுமதி கிடைக்கும் வரை ஊவா மாகாண சபையினால் அந்நிதியை வழங்குமாறும் கேட்டிருந்தார்.
மாதங்கள் பல கடந்தும் வடிவேல் சுரேஸ் எம்.பி.யின் உறுதி செயற்படாமையினால், ஊவா மாகாண சபையினால் வழங்கப்பட்ட பத்தாயிரம் ரூபாய் கொடுப்பனவை நிறுத்தவேண்டிய துர்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது' என்று அவர் குறிப்பிட்டார்.
'கல்வியமைச்சின் அனுமதி பெறப்பட்டால் மாத்திரமே உதவி ஆசிரியர்களின் மாதக்கொடுப்பனவை அதிகரிக்க முடியுமேயன்றி, ஊவா மாகாண சபையினால் எதுவும் செய்ய முடியாது. பதுளை எம்.பி. வடிவேல் சுரேஸ் ஊவா மாகாண தமிழ்க்கல்விக்கு பொறுப்பாக இருந்ந வேளையில், இக்கொடுப்பனவு அதிகரிப்பு பற்றி நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அது இடம்பெறவில்லை. வடிவேல் சுரேஸ் எம்.பி உண்மைக்கு புறம்பான செயற்பாடுகளில் இறங்கியமையினாலேயே ஆசிரிய உதவியாளர்கள் இத்தகைய நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்'என்று அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
20 minute ago