2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

“ஐ.தே.கவுடன் இணையோம்”

Kogilavani   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது, ஐக்கிய தேசியக் கட்சியுடன் நிரந்தரமாகவே ஒன்றிணைந்துவிட்டதன் காரணமாகவே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினருக்கு, புதியக் கட்சியை உருவாக்கும் தேவை ஏற்பட்டதாக, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

“ஸ்ரீ.சு.க., ஐ.தே.கவுடன் ஒன்றிணைந்ததன் காரணமாக, அவர்களது கட்சி இல்லாமல் போயுள்ளது. ஸ்ரீ.சு.கவுக்கு உண்மையானர்வர்கள், தமது எதிரியான ஐ.தே.கவுடன் என்றுமே ஒன்றுசேர மாட்டார்கள்” என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணிக்கு, அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் கூட்டம், கண்டி, அலவத்துகொடையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

“நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கம், மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிபீடமேறியப் போதிலும், இதுவரை, ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.

வெளிநாட்டு சக்திகளின் உதவியைக் கொண்டே, மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தலில் தோல்வியுற்றப் போதிலும் அவர் அரசியலிலிருந்து ஓய்வுபெறவில்லை. அவ்வாறு அவர் ஓய்வுபெற்றிருந்தால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி முற்றாக அழிந்திருக்கும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் நிரந்தரமாகவே கலந்துவிட்டது. எனவே, ஸ்ரீ.சு.கவின் உண்மையான உறுப்பினர்களுக்கு, தற்போது அவர்களது கட்சி இல்லாமல் போயுள்ளது. ஸ்ரீ.சு.கவுக்கு உண்மையானர்வர்கள், தமது எதிரியான ஐ.தே.கவுடன் என்றுமே ஒன்றுசேர மாட்டார்கள்.

இவர்களை கருத்திற்கொண்டே, ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி என்றக் கட்சி புதிததாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிசை தலைமையாகக் கொண்ட இக்கட்சி, எதிர்காலங்களில் நடைபெறும் அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிடும். ஸ்ரீ.சு.கவின் உறுப்பினர்களும் இக்கட்சியிலேயே போட்டியிடுவர்' என்று அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .