2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஐந்து பாடசாலைகளுக்கு மூடுவிழா

Kogilavani   / 2017 மார்ச் 07 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை கல்வி வலயத்துக்கு உட்பட்ட மிகவும் பின்தங்கிய ஐந்து பாடசாலைகள், மூடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலுக்கும்புர வித்தியாலயம், சீலகம, ஏகொடவல்கொட, வெஹெரகொட ஆகிய பகுதிகளிலுள்ள ஐந்து பாடசாலைகளே, இவ்வாறு மூடப்பட்டுள்ளன.

மேற்படி பாடசாலைகளுக்குச் செல்வதற்கான வீதிகள் சீரின்மைக் காரணமாகவே, இப்பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இப்பாடசாலைகளில் பணியாற்ற ஆசிரியர்கள் ஒருவரும் விரும்பாததன் காரணமாக, மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இப்பாடசாலைக்கென புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியர்களும் அங்கு பணியாற்ற விரும்பாது, இடமாற்றத்தை பெற்றுக்கொண்டுச் செல்வதாக தெரியவருகிறது.

இந்நிலையில், இது தொடர்பில், பலாங்கொடை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜீ.ஜீஆரியபாலகேவிடம் கேட்டப்போது,

 “பாடசாலைகளில் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறைக் காரணமாகவே, இப்பாடசாலைகளை மூட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவரை இப்பாடசாலைகள் மூடப்படவில்லை”  என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X