Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2015 நவம்பர் 19 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா.திருஞானம்
மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட பாடசாலைகளில் ஐந்து வருடங்களுக்கு மேல் கடமைபுரிந்த அதிபர்கள் இடமாற்றப்படவுள்ளனர். எதிர்வரும் ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக மத்திய மாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடரின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாகாண சபை உறுப்பினர் இ.ராஜாராம் கருத்து தெரிவிக்கையில், 'மலையக பாடசாலைகளில் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி நியமனம் பெற்ற அதிபர்களே அதிகமாக உள்ளனர்.
இதனால் பாடசாலைகளை முறையாக கொண்டு நடத்த முடியாமல் உள்ளது. நிர்வாக சீர்கேடுகளும் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களை உடனடியாக மேற்கொள்ள எடுத்த தீர்மானம் வரவேற்கத்தக்கதாகும். ஒரே பாடசாலையில் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்த அதிபர்கள் இடமாற்றப்படுவர். அதேபோல் ஆசிரியர் நிமனம் பெற்ற 3,179 பேர் ஒரே பாடசாலையில் 8 வருடங்கள் சேவையை பூர்;த்தி செய்துள்ளனர். அவர்களுக்கும் இடமாற்றம் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதனூடாக மலையகத்தில் சிறந்த, அரசியல் கலப்படமற்ற கல்விப் பணி முன்னெடுக்கப்படும்' என்றார்.
'மத்திய மாகாண கல்வி வலயங்களுக்குள் உள்வாங்கப்பட்டுள்ள அதிபர்;, ஆசிரியர்களின்; இடமாற்றங்கள்; முறையாக நடைபெறவில்லை. இதனால் மலையக கல்வி வளர்ச்சியில் பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. பல ஆசிரியர்கள் 10-30 வருடங்களாக ஒரே பாடசாலையில் பணி புரிந்து வருகின்றனர்;. சிலர் நியமனம் கிடைத்த அதே பாடசாலையிலேயே ஓய்வும் பெரும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
8 வருடங்கள் முடிந்தும் இடமாற்றம் செய்யப்படாத பல அதிபர், ஆசிரியர்கள் இருக்கின்றனர். இவ்வாறு இடமாற்றம் பெற்று சென்றவர்கள், அரசியல் செல்வாக்கினால் 3 மாதங்களுக்குப் பின்னர், அதே பாடசாலைக்கு மீண்டும் திரும்பிவிடுகின்றனர்.
அதிபர் தரத்திலுள்ள பலர் இருக்கும் நிலையில், ஆசிரியர் தரம் உள்ளவர்கள் பல பாடசாலைகளின் உயர் அதிகாரிகளின் செல்வாக்கினால் அதிபராக செயற்பட்டு வருகின்றனர். இவ்வாறானவர்கள் தவறான முறையில் பாடசாலையை முகாமைத்துவம் செய்கின்றனர். சிலர், பாடசாலையை தங்களின் வியாபார நிலையமாக கருதி வருகின்றனர்.
பாடசாலையின் தரத்துக்கு ஏற்ப அதிபர் நியமனங்கள் இல்லை. தற்போது அதிபர் தரம் ஒன்றில் சித்தியெய்திய பலர் இருக்கின்றனர். இவர்களுக்கு பாடசாலைகள் வழங்கப்படவில்லை. இதனால் அப்பாவி தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் பாதிப்படைந்துள்ளனர்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
9 hours ago