2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

“ஓகஸ்ட் மாதம் சிறைக்காலம் “

Kogilavani   / 2017 மார்ச் 06 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

“ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் ஆயுட்காலம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்துடன் நிறைவடையும்” என்று, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

“நாட்டின் சொத்துகளை சூறையாடியவர்களை, சிறைக்கு அனுப்பும் காலம் ஓகஸ்ட் மாதம்” என்றும் அவர் கூறினார்.

கண்டிக்கு, ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, அஸ்கிரிய மற்றும் மல்வத்தப் பீடங்களின் மகா நாயக்கர்களை சந்தித்தப் பின், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக,  நடவடிக்கைகளை எடுப்பதற்கு, இலங்கை அரசாங்கத்துக்கு ஒருவருட கால அவசாகம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒருவருட காலத்தில், இலங்கை அரசாங்கமானது, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X