2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கிணற்றில் விழுந்து குழந்தை பலி

Kogilavani   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

நோர்வூட், எலிபடை தோட்டம் மேற்பிரிவில் மூன்று வயது ஆண் குழந்தையொன்று,  இன்று காலை கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.

வீட்டின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை திடிரென காணாமல்போனதாகவும்  பெற்றோரும் பிரதேசவாசிகளும் இணைந்து தேடியபோது வீட்டின் பின்புறத்திலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை விழுந்து கிடந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குழந்தையை  உடனடியாக மீட்டு டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் அது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக  வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X