2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கம்பளை உடபலாத்த மக்கள் ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.எம்.ரம்ஸீன்

கம்பளை, உடபலாத்த குடிநீர் விநியோகத் திட்டத்தில், தெல்பிடிய பகுதி உள்ளடக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிரதேச மக்கள், கம்பளை உடபலாத்த பிரதேச சபைக்கு முன்பாக, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்பளை, தெல்பிடிய, இஜிராகம, நவதேவிட, ஸ்டோபீல் உள்ளிட்ட 8 கிராமங்களைச் சேர்ந்த மக்களே, இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'எமக்கு குடிநீர் தா' 'எம்மைப் புறக்கணிக்காதே' “உடபலாத்த பிரதேச சபையே அநீதி இழைக்காதே' முதலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை ஏந்தியவாறு, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இக்குடிநீர் பிரச்சினைத் தொடர்பாக, மாகாண உள்ளுராட்சி ஆணையாளருடன்   பேச்சுவார்தை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்வதாக உறுதியளித்தமையைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துச் சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

“கம்பளை உடபலாத்த குடிநீர் விநியோகத் திட்டம், தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால், இதில் தெல்பிடிய  பகுதி முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம், பெருந்தெருக்கள் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் பிரதியமைச்சர் அநுராத ஜயரட்ண ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டுச்செல்லப்பட்டுள்ளது. 

ஆனால், எமது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இப்பகுயில் 150க்கும் மேற்பட்ட  சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வருவதுடன் இவர்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர்” என தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .