Kogilavani / 2016 ஏப்ரல் 26 , மு.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியலமைப்பு மாற்றத்தில் மலையக சமூகமும் பங்கேற்றுள்ளது. நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக செயற்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாம், அதில் அங்கத்தவர்களாக உள்ளோம். அரசியலமைப்பில் நிலைநாட்ட வேண்டிய உரிமைகளை நாங்கள் அரசியலமைப்பு சபையில் பேசும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது' என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.
'அமையவிருக்கும் புதிய அரசியலமைப்பில் செனட் முறை அறிமுகப்படுத்தப்படலாம். அது நாடாளுமன்றம் போலவே ஓர் உயரிய சபையாக அமையலாம். அத்தகைய சபை ஒன்று அமையுமானால் அதில் மலையக மக்களும் உள்வாங்கப்படல் வேண்டும்' எனவும் சுட்டிக்காட்டினார்.
'இலங்கையில் செனட் முறை நடைமுறையில் இருந்தபோது மலையக செனட்டர்களையும் கொண்டிருந்தது. 1965இல் செனட் சபை உறுப்பினராக இருந்தவர் அமரர் ஆர்.ஜேசுதாசன் என்பதை நினைவுபடுத்தவே இன்று „செனட்டர் ஜேசுதாசன்புரம்... நிறுவப்பட்டுள்ளது... எனவும் அவர் கூறினார்.
நோர்வூட், தென்மதுரை தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய வீட்டுத்தொகுதிக்கு „செனட்டர் ஜேசுதாசன்புரம்... என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'கடந்த காலங்களில் மண்டபம் என்றாலும் கல்லூரி என்றாலும் கலாசாலை, விளையாட்டு, மைதானம் என்றாலும் ஒரே பெயரே மலையகத்தில் இடப்பட்டு வந்தது. இதன் மூலம் குடும்ப அரசியலை முன்னிறுத்தவும் மலையகத்துக்காக உழைத்த ஆளுமைகளை மறைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அமைச்சர் திகாம்பரத்தின் வருகையுடன் அந்த வரலாறு மாற்றியமைக்கப்படுகிறது. மலையகத்துக்காக உழைத்த அரசியல், தொழிற்சங்க, கலை இலக்கிய ஆளுமைகள், உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் நினைவுபடுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டு வருகின்றனர். கட்சி பேதம் பாராது வரலாற்றைத் திரும்பி பார்க்கும் வகையிலும் மலையக புதிய தலைமுறையினருக்கு வரலாற்றை நினைவுபடுத்தும் வகையிலும் இந்த பெயர் சூட்டல் இடம்பெற வேண்டும் என அமைச்சர் திகாம்பரம் தீர்மானித்து செயற்படுத்தி வருகிறார்.
நோர்வூட் தென்மதுரையின் ஒரு பகுதி „செனட்டர் ஜேசுதாசன்புரம்... என பெயரிடப்பட்டாலும், தென்மதுரையில் பிறந்த மற்றுமொரு ஆளுமையின் பெயரில் கடந்த மாதம் இறம்பொடையில் புதிய கிராமம் உருவாக்கப்பட்டது. “வி.சி.வேலு”... என இயற்பெயருடன் நோர்வூட், தென்மதுரையில் பிறந்து, இறம்பொடை லபுக்கலையில் வாழ்ந்தவரான “குறிஞ்சித் தென்னவன்” என்பவரது பெயரே அங்கு சூட்டப்பட்டுள்ளது. இது எமது மண்ணுக்குக் கிடைத்த மற்றுமொரு பெருமை' எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
23 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
33 minute ago
48 minute ago