Kogilavani / 2016 ஒக்டோபர் 03 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
'எதிர்வரும் நவம்பர் மாதம், நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள 2017ஆம் ஆண்டுக்கான பாதீட்டில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளவிடயமும் உள்ளடக்கப்பட வேண்டும்' உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, மௌன பிரார்த்தனை நிகழ்வு, கேகாலை, தெகியோவிற்ற டென்ஸ்வத்தை தோட்ட தமிழ் வித்தியாலயத்தில், ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது.
'சமூக, பொருளாதார, கல்வி, கலாசார, வீடமைப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் பெற்றுகொடுக்கும் வகையிலான நிதி ஒதுக்கீடு, பெருந்தோட்ட மக்களுக்கு பெற்றுகொடுக்கப்படல் வேண்டும்' என்ற கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டது.
செளிமிய இளைஞர் நிதியத்தின் ஏற்பாட்டில் 'மலையக மண்ணுக்கு அமைதி' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற, மகாத்மா காந்தியின் 147ஆவது ஜனன தின நிகழ்வின்போதே, மேற்படி மௌன பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய, சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து, 'மலையகத்தில் தலைமைத்துவத்தின் வழிகாட்டலின்று முறையற்ற வகையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலை நீடித்தால், மலையகம் அமைதியிழக்கும்' என்றார்.
'சம்பள விடயத்தில் முதலாளிமார் சம்மேளனம் மனமாற்றமடையவும், மலையகத்தில் செழிப்பு, வளர்ச்சி, மகிழ்ச்சி நிலவ வேண்டுமென இறை ஆசி வேண்டியும், நாளை புதன்கிழமை, ஒரு மனிநேர மௌனவிரதம், களனிவெளி பிளாண்டேசன் கம்பனிக்கு முன்பாக நடத்தப்பட உள்ளது' என்றார்.
'இந்த மௌன பிரார்த்தனை நிகழ்வானது, யாருக்கும் விரோதமாக நடத்தப்படவில்லை. மலையக மக்களது அவலங்களை போக்க இறை ஆசி வேண்டியே நடத்தப்படவுள்ளது' என்றார்.
29 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
37 minute ago
2 hours ago