Sudharshini / 2016 ஜூன் 02 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹெமட் ஆஸிக்
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 10 பொதிகளுடன் இரண்டு இந்தியர்களும் அவர்களுக்கு புகழிடம் கொடுத்த இலங்கை பெண்ணொருவரையும் கண்டி சுற்றுலாப் பொலிஸார் இன்று (02) கைதுசெய்துள்ளனர்.
கண்டி சுற்றுலாப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின்படி, கண்டி, சுதும்ஹுபொல பிரதேசத்தில் வைத்து மேற்படி மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளளர்.
பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 10 பொதிகளிலும் சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான உடைகள் இருந்துள்ளன.
மேற்படி உடைகள் அனைத்தும் வர்த்தக நோக்கிலேயே இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதெனவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026