2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

Sudharshini   / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஞ்சித் ராஜபக்ஷ

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெசல்கமுவ ஓயாவிற்கு நீர் வழங்கும் போற்றி தோட்ட ஆற்றுப்பகுதியில்  சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல்  அகழ்வில் ஈடுபட்டிருந்த மூவரை, ஹட்டன் விசேட பொலிஸ் பிரிவினர் வெள்ளிக்கிழமை (04) இரவு கைதுசெய்துள்ளனர்.

ஹட்டன் விசேட பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த தகவலுகமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் போற்றி தோட்ட பகுதியில் இவர்கள் பல நாட்களாக இவ்வாறு சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

மேலும், மாணிக்கக்கல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்கள் நோர்வூட் போற்றி பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்கள் மூவரையும் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளதாகவும்  அவர்களுக்கு எதிராக் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும் ஹட்டன் விசேட பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .