2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

2016 முதல் 2020 வரையில் புதிய கல்விக் கொள்கை

Sudharshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.திருஞானம்

நாட்டிலுள்ள கல்வித் துறையில் ஏற்பட்டிருக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக, தேசிய கல்வி நிறுவனத்தினால் 2016 முதல்; 2020 வரையிலான காலப்பகுதியில் புதிய கல்விக் கொள்கை ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இக்கல்விக் கொள்கை தொடர்பாக கவ்வி அமைச்சுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்வு, தேசிய கல்வி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை (31) நடைபெற்றது. இந்நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, 'தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்டு தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கௌ;ளக் கூடிய மிகவும் பின்தள்ளப்பட்ட, வசதிகள் குறைந்த பாடசாலைகளினதும் ஆளணியினரதும் அபிவிருத்தியை மையமாகக் கொண்டு நாட்டின் புதிய கல்விக் கொள்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகப் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தேசிய கல்வி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் குணபால நாணயகார தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .