2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மண்சரிவு அபாயம்: பிடரத்மலையிலிருந்து 10 குடும்பங்கள் வெளியேற்றம்

Kogilavani   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, பிரதான வீதிகள் மற்றும் சில பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

ஹப்புத்தளை, பிடரத்மலை பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக, 10 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதுடன், இவர்கள் சனசமூக பொது நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இப்பகுதியில், திங்கட்கிழமை இரவு பெய்த கடும் மழையை அடுத்து, மேற்படி 10 குடும்பங்களும் வெளியேற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, கொழும்பு- பதுளை பிரதான வீதி, ஹப்புத்தளை- மரன்கஹவெல வீதி, பெரகல – வெல்லவாய வீதி, ஹப்புத்தளை- வெலிமட, நுவரெலிய வீதி வரை மண்சரிவு அபாயம் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .