2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

‘ராஜிதவை சந்திக்க ஏற்பாடு’

Gavitha   / 2017 ஏப்ரல் 02 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட தோட்ட வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் பற்றி விவாதிக்க சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவை சந்திக்க சௌமிய இளைஞர் நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து மேற்கொண்டுள்ளதுடன், அஸீஸ் மன்றத்துடன் இணைந்து, விவரங்களை சேகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தெஹியோவிட்ட மல்வருசா உணவகத்தில், சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதன்போது, அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட கேகாலை மாவட்ட தோட்ட வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் மட்டுமின்றி உத்தியோகஸ்தர்களோ, ஊழியர்களோ இன்றி தோட்ட மக்கள் பெறும் அவஸ்தைகளுக்கு உள்ளாவதுடன், தனியார் வைத்தியசாலைகளையே நாடி செல்லும் நிலையில் உள்ளதாக எட்டியாந்தோட்டை கிரிபோறுவ தோட்ட தலைவரினால் தெரிவிக்கப்பட்டது.

மேலும்,  கேகாலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தோட்டவைத்தியசாலை விவரங்களுடன் மலையகத்தில் செயலிழந்துள்ள அனைத்து வைத்தியசாலை விவரங்களையும் சேகரிக்கவும் சுகாதார அமைச்சரை சந்தித்து நடவடிக்கை எடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டது.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் சம்பந்தமாக மற்றுமொரு கலந்துரையாடல் எதிர்வரும் 10ஆம் திகதி தெஹியோவிட்டவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .