2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

48 வீடுகள் கையளிப்பு

Kogilavani   / 2017 ஏப்ரல் 03 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை மாவட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 48 வீடுகள், மக்களின் பாவனைக்காக, ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டன.

லுணுகலையில் தலா 51/2 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 20 வீடுகளும், ஹல்துமுல்ல, நீட்வூட் இலக்கம் இரண்டில் தலா 6 இலட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 28 வீடுகளும்  மக்களின் பாவனைக்காக, ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டன.

இவ்விரு நிகழ்வுகளிலும்,  நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ் மற்றும் எம்.திலகராஜ் ஆகியோர் கலந்துகொண்டு, வீடுகளை மக்களின் பாவனைக்காக கையளித்தனர்.

இதன்போது, நீட்வூட் வீடமைப்புத் திட்டத்தில் முன்னின்று பணியாற்றிய பரமேஸ்வரி என்ற பெண் தொழிலாளி, பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .