2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

“விண்ணப்பியுங்கள்”

Kogilavani   / 2017 மார்ச் 13 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

'ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் அங்கத்தவர்களது பிள்ளைகளுக்கு, 12,000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் விசேட வேலைத்திட்டம்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களின் பிள்ளைகளுக்கே, இந்த உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, எதிர்வரும் 31 ஆம் திகதிக்குள் அனுப்ப வேண்டும். எனவே, இந்த வாய்ப்பை எமது சமூக மாணவ, மாணவியர் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

'பெருந்தோட்டப் பகுதிகளின் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களது பிள்ளைகள், (க.பொ.த. உயர்தரத்தில் சித்தியடைந்தவர்கள்) அனைவரும் 12,000 ரூபாய் உதவித்தொகையை பெற்றுக்கொள்வதற்கு தகுதியானவர்களாவர்.

இதற்கான விண்ணப்பங்கள், குறிப்பிட்ட பாடசாலை அதிபர்களினால் உறுதிப்படுத்தப்பட வேண்டியதும் முக்கியமாகும்.

விண்ணப்பங்களை முறையாகவும் கிரமமாகவும் பூர்த்திசெய்த, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்பாக, புலமைப்பரிசில் உத்தியோகத்தர், ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச்சபை, இல. 92, கிருள வீதி, நாரஹேன்பிட்டி, கொழும்பு- 05 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மேலும் குறிப்பிட்ட விண்ணப்பத்தை அனுப்பும் தபாலுறையின் இடதுபக்க மேல் மூலையில், 'உயர்தரம் 2016' எனக் குறிப்பிடுதல் முக்கியமாகும்.

கிடைத்திருக்கும் இவ்வறிய சந்தர்ப்பத்தை, எமது மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகும்' என்று குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .