2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

“வைத்தியசாலைகளின் குறைகளை தீர்ப்பேன்”

Kogilavani   / 2017 மார்ச் 06 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை, உடனடியாக தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதாக, மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.

மஸ்கெலியா ஆதார வைத்தியசாலைக்கு, இன்று விஜயம் மேற்கொண்ட அவர், அங்கு நடைபெற்ற கலந்துரையாடற் கூட்டத்திலும் பங்கேற்றார்.

வைத்தியசாலைகளின் குறைபாடுகளை கேட்டறிந்துக்கொண்ட அவர், இவ்விடயங்களை, சுகாதார அமைச்சின் கவனத்துக்குக் கொண்டுச் சென்று, உடனடியாக தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் கூறினார்.

ஹம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் வெள்ளையன் தினேஷ் மற்றும் மஸ்கெலியா நகர வர்த்தக பிரமுகர்களும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X