2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'வெறுப்புணர்வுப் பேச்சுக்கள் வேண்டாம்' செயலமர்வு

Niroshini   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

'வெறுப்புணர்வுப் பேச்சுக்கள் வேண்டாம்' என்ற தொனிப் பொருளிலமைந்த விழிப்புணர்வுச் செயலமர்வு கண்டி கெட்டம்பேயிலுள்ள சர்வதேச சிவில் சேவைகள் தன்னார்வ உதவு நிறுவனத்தின் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றதாக அந்நிறுவனத்தின் தேசிய செயலாளர் முஹம்மத் ரஜுதீன் தெரிவித்தார்.

சமாதான சமூக நல சேவையிலுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச செயற்பாட்டாளர்கள் சுமார் 25 பேர் பங்குபற்றிய இந்த ஐந்து நாள் செயலமர்வு புதன்கிழமை ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (06) முடிவடைந்தது.

வெறுப்புணர்வூட்டும் பேச்சுக்கள், இனவாதம், பாகுபாடு, அஹிம்சை வழியிலான தொடர்பாடல், வன்முறைகளுக்கு அஹிம்சை வழிச் செயற்பாடுகளின் மூலம் பதிலிறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயதானங்களில் செயலமர்வு இடம்பெற்றதாக அவர்  மேலும் தெரிவித்தார்.

சேர்பிய நாட்டைச் சேர்ந்த சமாதான செயற்பாட்டுகளில் பயிற்சி வல்லுநரான இவானா கொஸ்ராடிநோவிக் ( பிரதான வளவாளராக கலந்து கொண்டு செயலமர்வை நடத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .