Kogilavani / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொகவந்தலாவை, ஸ்ரீபுர கிராமத்திலுள்ள நெசவுசாலைக்கு, மத்திய மாகாணசபை உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மின்சாரம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதற்காக, அம்பகமுவ பிரதேச சபையின் ஊடாக 55,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
50 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்நெசவுசாலை, மத்திய மாகாண கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றது.
எனினும், இங்கு மின்சார வசதி ஏற்;படுத்தி கொடுக்கப்படாமையினால் இந்நிலையத்தில் சேவையாற்றும் பெண்கள் பல்வேறு அசௌககரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இந்நெசவுசாலைக்கு மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் பட்சத்தில், பொகவந்தலாவை தோட்டத்தை சேர்ந்த யுவதிகள் நெசவு பயிற்சி மற்றும் நெசவு தொழிலை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago