2025 மே 01, வியாழக்கிழமை

1,000 ரூபாய்கு தொழிலாளர்கள் மகிழ்ச்சி

Gavitha   / 2021 மார்ச் 11 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன் 

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளாக, 1,000 ரூபாய் வழங்கப்படவேண்டும் என்ற தீர்மானத்துக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இது தொடர்பில் தங்களது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக போராடிய, தொழிற்சங்கங்கள், சிவில்  அமைப்புகள், சம்பள நிர்ணய சபை, ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர்.

தங்களுக்கு நாள் சம்பளமாக 1,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 2014ஆம் ஆண்டு முதல் போராடி வருகின்ற நிலையில், 6 வருடங்களுக்கு பின்னர் இந்த 1,000 ரூபாய் சம்பளம் கிடைக்கப்பெறவுள்ளதாக, பெருந்தோட்ட வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

ஆனால், வேலை நாள்கள் குறைக்கப்படாமல், தொழில் சுமைகள் அதிகரிக்கப்படாமல்தான், தமக்கு இந்த சம்பள உயர்வு வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். அத்துடன், தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு அது தொடர்ந்தும் அமுலில் இருக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை, ஆயிரம் ரூபாவை வழங்கிவிட்டு வேலை நாள்களில் கை வைத்தால், அதை தாங்கள் அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .