Kogilavani / 2021 ஜனவரி 19 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிரோஷினி விஜயராஜ்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளமாக 1,000 ரூபாயைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்று தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், இவ்விடயம் தொடர்பில் கம்பனிகளுடன் பேசுவது பிரயோசனமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.
1000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கும் நிலையில், பெருந்தோட்ட அபிவிருத்திச் சபையும் அதற்கு இணங்கலாமே என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (19) நடைபெற்ற வாய்மூல விடைக்கான நேரத்தில் கேள்வி எழுப்பி உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 1,000 வழங்க வேண்டும் என்பது அடிப்படை தீர்மானமாக உள்ளதென்றார்.
இந்நிலையில், பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை என்பது, அரசாங்கத்தின் சபையாகுமெனத் தெரிவித்த அவர், 1,000 ரூபாயை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கும் நிலையில், பெருந்தோட்ட அபிவிருத்தி சபையும் அதற்கு இணங்லாமே எனவும் கூறினார்.
பெருந்தோட்டக் கம்பனிகளுடன் பேசுவது ஏமாற்று வேலை எனவும் அரசாங்கம் என்ற வகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,000 ரூபாயைக் கொடுக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago