Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 29 , மு.ப. 08:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.சுந்தரலிங்கம்
ஹட்டன் கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட 22 தமிழ், சிங்கள பாடசாலை மாணவர்களுக்கு, 1,250 டெப்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலயக் கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அதிகஷ்ட்ட பிரதேச மாணவர்களின் நலனை கருத்தில்
கொண்டு, அவர்களின் கல்வியினை நிகழ்நிலை மூலம் பெற்றுக்கொடுத்து ஊக்குவிப்பதற்காக,
அரசாங்கம் குறித்த டெப்களை வழங்க முன்வந்த்தாக அவர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வு ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பானர் பி.ஸ்ரீதரன் தலைமையில், ஆசிரியர் வள
நிலையத்தில் நேற்று (28) திகதி நடைபெற்றது. இவ்வாறு டெப்கள் வழங்கி வைக்கப்பட்ட பாடசாலைகளில், வைபை தொழிநுட்பம் மற்றும் பைபர் தொழிநுட்பங்களை பயன்படுத்தி இணைய வழி கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டத்தினை ஸ்ரீ லங்கா டெலிகொம் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாணவர்களின் இணைய வழி கல்வியினை மேம்படுத்த ஒரு சில ஆசிரியர்களுக்கும் இதன் போது டெப்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .