2026 மே 09, சனிக்கிழமை

dd

100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

Editorial   / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா.யோகேசன்
 

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின், ரொசல்ல பகுதியில் சிலாபத்திலிருந்து ஹட்டன் நோக்கி வந்த கார், இன்று (15) வீதியை விட்டு விலகி, 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில், நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கார், 100 அடி பள்ளத்தில் விழுந்தபோது, மரமொன்றில் தடுக்கப்பட்டு, அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது என்றும் இதனால் ஏற்படவிருந்த பாரிய விபத்து தடுக்கப்பட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காரில் மூவர் பயணித்துள்ளனர் என்றும் அதில் இருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது என்றும் பலத்த காயமடைந்த ஒருவர் முதலில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .