2025 மே 01, வியாழக்கிழமை

10ஆம் இலக்கத்தால் பதுளையில் பதற்றம்

Editorial   / 2024 நவம்பர் 11 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளையில் முன்னாள் அமைச்சர் ஹரீன்பெர்ணான்டோவின் தேர்தல் பிரச்சாரத்தினை பொலிஸார் தடுக்க முயன்றதை தொடர்ந்து பதற்றநிலை ஏற்பட்டது.

சர்வதேச கால்பந்தாட்ட வீரர் லயனல் மெசியின் ஜேர்சியை போன்ற பத்தாம் இலக்க டீசேர்ட்டை  அணிந்து ஹரீன்பெர்ணான்டோவும் அவரது ஆதரவாளர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

எனினும் பொலிஸாரும் தேர்தல்திணைக்கள அதிகாரிகளும் இதுமறைமுக பிரச்சாரம் போல அமைவதாக தெரிவித்து  அதனை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை தொடர்ந்து வாக்குவாதம் மூண்டது - அந்த ரீசேர்ட் தேர்தல் பிரச்சாரத்துடன் தொடர்புபட்டது இல்லை என ஹரீன்பெர்ணான்டோவும் அவரது ஆதரவாளர்களும் வாதிட்டனர்.

எனினும் இது முன்னாள் அமைச்சரின் தேர்தல் தேர்தல் போட்டிக்கான அடையாளக்குறிப்பாக காணப்படுவதாகவும்,ஏமாற்று அரசியல் பிரச்சாரம் எனவும் தேர்தல் ஆணையக அதிகாரிகளும் பொலிஸாரும் குறிப்பிட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .