2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

11 பிள்ளைகளின் தந்தை அடித்துக்கொலை

Editorial   / 2024 ஒக்டோபர் 06 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று முதல் பதினைந்து வயது வரையான பதினொரு பிள்ளைகளின் தந்தை (41 வயது)  மனைவியின் சகோதரனால் அடித்துக் கொல்லப்பட்டதாக றக்வான பொலிஸார் தெரிவித்தனர்.

றக்வான ரங்வலதென்ன தோட்டத்தில் வசித்து வந்த செல்லப்பன் பாலகிருஷ்ணன் என்ற தோட்ட தொழிலாளியே கடந்த 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கு இரண்டு மனைவிகளும், ஒரு மனைவிக்கு ஏழு பிள்ளைகளும், மற்றைய மனைவிக்கு நான்கு பிள்ளைகளும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் குடிபோதையில்   தகராறு செய்த போது, ​​இறந்தவர் மனைவியின் சகோதரரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கானவர் சுமார் ஒன்றரை மணிநேரம் இரத்தம் கசிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் உள்ளூர்வாசிகள் பலர் காயமடைந்த நபரை றக்வான மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து  கஹவத்தை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 4ஆம் திகதியன்று அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X