2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

12 மாவட்டங்களுக்கு இந்தியா உதவி செய்ய வேண்டும்: பிரதியமைச்சர் பிரதீப்

Editorial   / 2025 ஓகஸ்ட் 05 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  சந்தோஷ் ஜா மற்றும்  பெருந்தோட்ட , சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோருக்கிடையிலான  விசேட கலந்துரையாடல்   கொழும்பு இந்திய தூதரகத்தில், செவ்வாய்க்கிழமை (05)  இடம்பெற்றது.

இதன்போது  மலையக மக்களுக்கான உதவித்திட்டங்களை ஒரு மாவட்டத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது மலையக மக்கள் செறிந்து வாழும் 12 மாவட்டங்களுக்கும்  வழங்குவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.  

இந்திய அரசாங்கம் இதுவரையில்  இலங்கைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் உதவிகளுக்கும் ஒத்துழைப்புகளுக்கும்  நன்றி தெரிவித்த பிரதியமைச்சர் பிரதீப், கடந்த காலங்களிலும் அவ்வாறே, நிகழ்காலத்திலும்  முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து வேலைத்திட்டங்களுக்கு  பெருமனம் கொண்டு வாழ்த்துவதாக இந்திய உயர்ஸ்தானிகரிடம்  தெரிவித்தார்.

 இதன்போது தமது அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகரிடம் பிரதியமைச்சர் பிரதீப் விரிவாக எடுத்துரைத்தார். அதில்  விசேடமாக  விஞ்ஞான ,தொழிநுட்ப வினைத்திறன்  பயிற்சி வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல் , மலையக  பாடசாலைகளை அபிவிருத்தி செய்தல்,  பெருந்தோட்டங்களில் வேலை செய்யும்  தொழிலாளர்களுக்கு வசதி அளிக்கக்கூடிய ஓய்வறைகளை நிர்மாணித்தல், பாடசாலைகளுக்கான கற்றல் கற்பித்தல் விஞ்ஞான உபகரண  சாதனங்கள் மற்றும் மாணவர்களின் திறன் அபிவிருத்தி உபகரணங்களைப்  பெற்றுக்கொடுத்தல் போன்ற சுமார் 10க்கும் மேற்பட்ட வேலைத் திட்டங்கள் தொடர்பாக காத்திரமான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மலையக மக்கள் செறிந்து வாழும் 12 மாவட்டங்களுக்கும் முன்னுரிமைப்படுத்தி இவ் வேலைத்திட்டங்களை  அமல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக  பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.  இக்கலந்துரையாடலில் போது பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சரின்  ஆலோசகரும் பிரத்தியேக செயலாளருமான  கலாநிதி  பி.பி சிவப்பிரகாசம், ஒருங்கிணைப்பு செயலாளர்களான வசந்த மூர்த்தி, சிவனேசன் ஆகியோர் இணைந்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .