2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

14 வயதுச் சிறுமியை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும்  இரு சந்தேக நபர்களை  கட்டுகஸ்தோட்டை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கண்டி கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் 14 வயதுச் சிறுமியின்  காதலனும் 38 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியொருவரும் அச்சிறுமியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோத்துக்கு உள்ளாக்கியுள்ளதாகவும்  பொலிஸ் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரையும் துஷ்பிரயோகத்துக்குள்ளாகிய அச்சிறுமியையும் கண்டி பிரதான நீதவான் லலித் ஏக்கநாயக்க முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட பொழுது சந்கேக நபர்கள் இருவரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறும் சிறுமியை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.பீ.தியகெலினாவல தலைமையில் மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X